அத்துடன், அது, நாணய கொள்கை தளர்வில் எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்பது தொடர்பான சுற்றுநிருபம் இன்றைய தினம் வெளியிடப்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று (24) இடம்பெற்ற நாணயசபையின் முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கொள்கை வட்டி வீதம் குறைக்கப்படும் முறை நிதி கொள்கை முன்னேற்றத்துக்கமைய சந்தை வட்டி வீதத்தையும் குறைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அவ்வாறு மாற்றம் ஏற்படாவிட்டால் ஏதாவது ஒரு ஒழுங்கு முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என முன்னதாக குறிப்பிடப்பட்டது.
அதற்கமைய வட்டி வீதம் ஓரளவு குறைந்திருந்தமை தொடர்பில் கடந்த நாணய சபை கூட்டத்தில் அவதானிப்பட்டது.
இந்நிலையில், சந்தை வட்டி வீதங்கள் குறைவடையும் வேகம் போதுமானதாக இல்லை என்பதுடன், கொள்கை வட்டி வீதத்தை குறைப்பதற்க்கு முன்னர் இதுவரையில் குறைக்கப்பட்ட வட்டி வீதம் மற்றும் ஏனைய வருவாய் அதிகரிப்பின்னூடாக கிடைத்த பிரதிபலன்;களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.
அதேநேரம், 2023ஆம் ஆண்டில் இலங்கை பணியாளர்களின் ஊடாக ஈட்டும் வெளிநாட்டுப் பணவனுப்பல் 06 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் சுற்றுலாத்துறையின் வருமானம் 2 தசம் 3 பில்லியனை விடவும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.