மினுவாங்கொடையில் உள்ள பௌத்த விகாரையிலிருந்து மூன்று இளம்பெண் பௌத்த துறவிகள் காணாமல்போனமை தொடர்பில் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
12, 15, 18 வயதுடைய பெண் பௌத்த துறவிகள் காணாமல்போனமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
விகாரையின் தலைமை மதகுரு மோசமாக நடந்துகொண்டதாகவும், இதனை தொடர்ந்து அவர்கள் அந்த விகாரையில் இருந்த 32 வயதுடைய பெண்ணுடன் அங்கிருந்து வெளியேறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன் பின்னர், அவர்கள் நுவரெலியாவில் உள்ள வீடொன்றுக்கு சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து உறவினர்கள் அவர்களை நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.