நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் (03) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 308.60 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 309.70 ரூபாவாக காணப்பட்டது.
அத்துடன், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 322.20 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 322.68 ரூபாவாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.