புதிய திட்டம் ஒன்று தயாரிக்கப்படும் வரையில் சிறுநீரக நோயாளர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் முதியோர்களுக்கு தற்போது வழங்கப்படும் நலன்புரி கொடுப்பனவை மாற்றமின்றி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த மூன்று பிரிவினர்களிலும், 6 இலட்சத்து, 47 ஆயிரத்து 683 பேர் நலன்புரி கொடுப்பனவுகளுக்காக தகுதி பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
5 இலட்சத்து 17 ஆயிரத்து 962 முதியோரும், 88 ஆயிரத்து 602 விசேட தேவையுடையோரும், 41 ஆயிரத்து 119 சிறுநீரக நோயாளர்களும் நலன்புரி கொடுப்பனவுக்கான காத்திருப்பு பட்டியில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.