மாணவர்களை பாடசாலையில் சேர்ப்பதற்காக போலி ஆவணங்களை தயாரித்தார் என்ற குற்றச்சாட்டில் கிராம அலுவலர் ஒருவரை கண்டி விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், கண்டி பிரதேசத்துக்கு உட்பட்ட பிரிவு ஒன்றுக்குப் பொறுப்பான கிராம அலுவலரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போலி ஆவணங்களை தயாரித்து, தவறான தகவல்களை பதிவு செய்து கிராம சேவகர் சான்றிதழ் வழங்க உதவிய குற்றச்சாட்டிலேயே கிராம அலுவலர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.