நாடு முழுவதும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து குறுந்தகவல் மற்றும் ஈ-பட்டியல் மூலம் மாத்திரம் நீர் கட்டணப் பட்டியல் வழங்கப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அந்த சபையின் நீர் பட்டியல் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாத் இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
திருகோணமலை, கொழும்பு தெற்கு, கண்டி தெற்கு மற்றும் பொலன்னறுவை ஆகிய நான்கு பிரதேசங்களுக்கு எதிர்வரும ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து குறுந்தகவல் அல்லது ஈ-பட்டியல் மூலம் மாத்திரமே நீர் பட்டியலை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரிமாதம் முதலாம் திகதியிலிருந்து, நாடளாவிய ரீதியாக இந்த நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளதாக பியல் பத்மநாத் குறிப்பிட்டுள்ளார்.