மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காத்தான்குடி புராதன நூதனசாலை தற்போது உரிய பராமரிப்பின்றி, குப்பைகள் தேங்கிய நிலையில் காணப்படுகிறது.
இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தை, வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட இந்த பூர்வீக நூதனசாலைக்கு நாடெங்கிலும் இருந்து பெருமளவினர் அன்றாடம் சென்று பார்வையிடுகின்றனர்.
இந்த நூதனசாலையை பார்வையிடுபவர்களுக்கான நுழைவுச்சீட்டுகளும் அங்கே வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் காத்தான்குடி நகர சபையின் பராமரிப்பின் கீழுள்ள இந்த புராதன நூதனசாலையானது எதிர்வரும் 04.09.2023 திகதி தொடக்கம் 14.09.2023 வரை திருத்த வேலைகள் காரணமாக மூடப்பட்டிருக்கும்.
எனவே இக்காலப்பகுதியில் இதனை பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதுடன் இதனால் தங்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவிப்பதாக காத்தான்குடி நகர சபை அறிவித்தல் ஒன்று முன்வைத்துள்ளது. (யாழ் நியூஸ்)