தாடி காரணமாக விரிவுரைகள் மற்றும் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தடை விதிக்கப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரை பரீட்சைக்குத் தோற்ற அனுமதிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் அப்துல் ரஹீம் மொஹமட் என்ற மாணவர் சமர்ப்பித்த ரிட் மனுவை விசாரணை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.