நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் பொழுது, இன்றைய தினம் (25) நாட்டில் தங்கத்தின் விலை சற்று குறைவடைந்துள்ளது.
உள்நாட்டு விற்பனையாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, இன்றைய தினம் 24 கரட் தங்கத்தின் விலை 175,650 ரூபாவாக பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் 24 கரட் தங்கத்தின் விலை 175,800 ரூபாவாக காணப்பட்டது.
அத்துடன், 22 கரட் தங்கத்தின் விலை 161,050 ரூபாவாக பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் 22 கரட் தங்கத்தின் விலை 161,200 ரூபாவாக காணப்பட்டது.