களுத்துறை பாடசாலை ஒன்றின் இரு சுவர்களுக்கு இடையில் சிக்கியிருந்த ஏழு வயது பாடசாலை மாணவி நேற்று (14) களுத்துறை மாநகர சபையின் தீயணைப்பு திணைக்கள அதிகாரிகளினால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
களுத்துறை கட்டுகுருந்த றோமன் கத்தோலிக்க பாடசாலையில் இரண்டாம் தரத்தில் கல்வி கற்கும் சிறுமி சுமார் 30 நிமிடங்களுக்கு இரண்டு சுவர்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
அதிநவீன கருவியைப் பயன்படுத்தி இரண்டு சுவர்களைத் தள்ளிவிட்டு சிறுமி மீட்கப்பட்டதாக தலைமை தீயணைப்பு அதிகாரி பி.லக்ஷன் தெரிவித்தார்.
குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக மாநகர சபையின் ஆம்புலன்ஸ் ஒன்றும் இருந்தது. குழந்தை காயமின்றி மீட்கப்பட்டது, என்றார். (யாழ் நியூஸ்)