கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மூன்று வயது சிறுவன் ஒருவனின் சிறுநீரகம் அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் இன்று (02) கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்திர ஜயசூரிய முன்னிலையில் விடயங்களை முன்வைத்தபோதே நீதிவான் பொலிஸாருக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.