காலி சிறைச்சாலையில் கைதிகள் இருவர் உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவந்துள்ளதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழப்புகளுக்கு பற்றீரியா தொற்றுதான் காரணம் என தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நோய் அறிகுறிகளுடன் 07 கைதிகள் சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டள்ளார்.
அந்த நபர்களுக்கு காய்ச்சல் மற்றும் தோல் நோய் இருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் கூறியுள்ளார்.
இறந்தவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களும் விளக்கமறியல் சிறையில் உள்ள கைதிகளாவர்.
இச்சம்பவம் தொடர்பாகன அறிக்கையைப் பெறவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் காலி சிறைச்சாலையில் தற்போது 1,023 கைதிகள் உள்ளனர் எனவும் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.