கடந்த 15 நாட்களுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (02) கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 309.70 ரூபாவாகவும் விற்பனை விலை 322.68 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
எவ்வாறாயினும், நேற்று முன்தினம் கொள்முதல் விலை 322.96 ரூபாவாகவும், விற்பனை விலை 335.40 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (02) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,