கண்டியில் இருந்து மாத்தளை வரையிலான ரயில் சேவை அடுத்த வாரம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 18 ஆம் திகதி நள்ளிரவு முதல் ஆகஸ்ட் 21 ஆம் திகதி அதிகாலை 04.00 மணி வரை ரயில் சேவைகள் இடைநிறுத்தப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
கண்டிக்கும் கட்டுகஸ்தோட்டைக்கும் இடையிலான புகையிரதப் பாதையின் பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)