பிறந்த சிசுவை உடனே கொன்று வீசிய தம்பதியினர்! #இலங்கை

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிறந்த சிசுவை உடனே கொன்று வீசிய தம்பதியினர்! #இலங்கை


பிறந்த சிசுவை உடனடியாக வீதிக்கு கொண்டு வந்து கொன்று வீசிய கணவன் மனைவியை முல்லேரியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட பெண், பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அக்குழந்தையின் தந்தையென கூறப்படும் நபர் பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.


முல்லேரியா பண்டார மாவத்தை களனிமுல்ல தெருவில் உள்ள அவரது வீட்டில் நேற்று (08) இரவு சிசுவை பெற்றெடுத்துள்ளதுடன், சிசுவை கொன்று வீதிக்கு கொண்டு வீசியுள்ளனர் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.


இரத்தக் கறைகளைத் தொடர்ந்து சென்ற பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்குச் சென்று ஜோடியை கைது செய்துள்ளனர்.


சந்தேகத்திற்கிடமான கணவனும் மனைவியும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.