மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தவர் வைத்தியசாலையில் மரணம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தவர் வைத்தியசாலையில் மரணம்!


மட்டக்களப்பு வந்தாறுமூலையில் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட கணவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த புதன்கிழமை (23) உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி வந்தாறுமூலையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக 74 வயதுடைய கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனையடுத்து, அவர் சுகயீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். 

இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

உயிரிழந்த நபரான 74 வயதுடைய வீரக்குட்டி தவராசாவின் உடல் பிரேத பரிசோதனையின் பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.