ஏழு குழந்தைகளை கொலை செய்ததற்காகவும் மேலும் ஆறு குழந்தைகளை கொலை செய்ய முற்பட்டமைக்காகவும் லூசி லெட்பை என்ற தாதிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான கொலைகள் மிகவும் கொடூரமான செயல் என தண்டனை வழங்கிய நீதிபதி தெரிவித்துள்ளார்.
தண்டனை காலத்தில் எந்த கட்டத்திலும் இவருக்கு பரோல் எனப்படும் தற்காலிக பிணை வழங்கப்படமாட்டாது எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த கொலைகளை செய்த லூசி லெட்பை தண்டனை வழங்கப்படும் போது நீதிமன்றில் முன்னிலையாக மறுத்துள்ளார்.
இந்த நிலையில், குற்றவாளிகள் தண்டனை வழங்கப்படும் போது நீதிமன்றத்தில் முன்னிலையாவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டத்தினை மாற்றுவதற்கான உரிய நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, மருத்துவ தாதிக்கு சட்ட ஆலோசனை வழங்க சட்டதரணிகள் முன்வர மறுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.