பத்தரமுல்லை, தலங்கம, கோரம்பே பகுதியில் இன்று (25) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 44 வயதுடைய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டின் சிசிடிவி காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. (யாழ் நியூஸ்)