மஹியங்கனை பொது வைத்தியசாலையில் கடமை புரியும் ஊழியர் ஒருவரினால் வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையில் பெறப்பட்ட சாக்லேட்டினுள் மனித விரல் ஒன்று காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நேற்று மாலை சுமார் 3.00 மணியளவில் மஹியங்கனை வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையில் வைத்தியசாலையின் சிற்றூழியர் ஒருவர் சாக்லேட் ஒன்றை வாங்கியுள்ளார்.
வாங்கிய சாக்லேடினை உண்ணும் போது மிகவும் கடினமாக முறையில் வாயில் கடிபட்டதை தொடர்ந்து அதை கழுவி பார்த்த போது நகத்துடன் கூடிய விரல் பகுதி ஒன்று காணப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வைத்தியசாலையின் உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை மஹியங்கனை பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
-ராமு தனராஜா