அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று (28) முதல் ஆரம்பமாகின்றன.
அதன்படி, இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இரண்டாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் கடந்த ஜுலை மாதம் 24ஆம் திகதி ஆரம்பமாகி இந்த மாதம் 16ஆம் திகதி நிறைவடைந்திருந்தது.
இதேவேளை, கண்டி நகரில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று, நாளை மற்றும், எதிர்வரும் 31ஆம் திகதிகளில் மூடப்படும் என மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே தெரிவித்துள்ளார்.
எசல ஊர்வலத்தை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலீடாக 3 சனிக்கிழமை நாட்களில் பாடசாலை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
வாகன நெரிசல், சன நெரிசல் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே குறிப்பிட்டுள்ளார்.