கண்டியில் நேற்று (22) இடம்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கும்பல் பெரஹெராவின் போது விஷ்ணு தேவாலயத்தைச் சேர்ந்த இரண்டு யானைகள் குழப்பமடைந்ததில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த இரண்டு யானைகளும் குழப்பத்தில் ஈடுபட்டதையடுத்து, ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சொந்தமான மேலும் இரண்டு யானைகளும் குழம்பின.
இந்நிலையில், தலதா மாளிகைக்குச் சொந்தமான இரண்டு யானைகளும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு வீதிகளில் ஊர்வலமாகச் சென்றன. மற்றைய இரண்டு யானைகளும் குயின்ஸ் ஹோட்டல் அருகே கட்டப்பட்டிருந்தன.
சம்பவத்தின் போது, பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், மூவர் அச்சமடைந்து கண்டி ஏரியில் (நுவர வெவ) வீழ்ந்துள்ளனர். பின்னர், மூவரையும் பொலிஸ் உயிர்காக்கும் பிரிவு அதிகாரிகள் மீட்டனர்.