பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய டிஜிட்டல் குரல் தொடர்பு மாற்று அமைப்பு ஒன்று நேற்று (23) திறந்து வைக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கான ரூ. 670 மில்லியன் முதலீடும் முழுமையாக இலங்கை விமான மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அமைப்பு, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் தகவல் தொடர்புகளை வான்-தரை நிலையங்கள் மூலம் விமானத்தை நோக்கி தானாக ஒளிபரப்பு செய்வதன் மூலம் அனைத்து தொழில்நுட்ப மேல்நிலைகளையும் நிர்வகிக்கிறது.
குறித்த நிகழ்வில் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.