துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் தோட்டாக்களுடன் அக்குறணை - அலவத்துகொடை பகுதியில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அலவத்துகொடையின் அக்குறணை நகரப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியை அவதானித்த புலனாய்வு பொலிஸ் அதிகாரி ஒருவர் குறித்த முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் ஒருவர் வீதியில் சென்ற நபரிடம் பொதி ஒன்றை வழங்குவதை அவதானித்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த புலனாய்வுத்துறை அதிகாரி குறித்த பொதியை சோதனை செய்ததில் இந்த தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
பின்னர், இது தொடர்பில் அலவத்துகொடை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.