யாழ். கல்வியங்காட்டில் நேற்று முன்தினம் (12) இடம்பெற்ற கொலையின் பின்னணியில் 08 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமையே காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இரு பெண்கள் உட்பட 08 பேர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியும் பொலிஸ் நிலையத்தில் தாயாருடன் தங்க வைக்கப்பட்டுள்ளார் என்று அறியக் கிடைத்துள்ளது.
கொலையான நபர் கடத்தப்பட்டு இரண்டு நாட்கள் சித்திரவதைகள் செய்யப்பட்டார் என்று பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவரின் உடலில் அடிகாயங்கள் காணப்படுவதுடன், அவற்றில் இரத்தக் கசிவும் காணப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, கொலையானவரை சித்திரவதைக்கு உள்ளாக்கியவர்கள் அதனை தமது கைபேசிகளில் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலையான நபர் நேற்று முன்தினம் அவரின் வீட்டில் சடலமாக காணப்பட்டார். அவரின் மனைவி, அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்து வருகின்றனர்.