பொரளை லேடிரிஜ்வே வைத்தியசாலையில் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் சிறுநீரகங்கள் குறித்து மருத்துவ அறிக்கைகளுக்கும் பிரேத பரிசோதனை அறிக்கைகளுக்கும் இடையில் காணப்படும் முரண்பாடு குறித்து உடனடி விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொரளை பொலிஸாருக்கு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜெயசூரிய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மருத்துவ பரிசோதனைகளில் சிறுவனிற்கு இரண்டு சிறுநீரகங்கள் என தெரிவிக்கப்பட்டதாகவும், எனினும் பிரேத பரிசோதனையில் ஒரு சிறுநீரகம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணியின் வேண்டுகோளை தொடர்ந்தே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மருத்துவ பரிசோதனை அறிக்கை இரண்டு சிறுநீரகங்கள் என தெரிவிக்கும் போது, பிரேத பரிசோதனை அறிக்கையில் ஒரு சிறுநீரகம் என ஏன் தெரிவிக்கப்பட்டுள்ளது என விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.