அரச சேவைக்கு அடுத்த வருடம் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது என நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
எனவே, அடுத்த வருடத்துக்கான மதிப்பீடுகளை தயாரிப்பதில் அதற்கான ஒதுக்கீடு எதுவும் வழங்கப்பட மாட்டாது என செயலாளர் கூறியுள்ளார்.
அடுத்த வருடத்துக்கான சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் மதிப்பீடுகள் இவ்வருடம் ஜூன் 30 ஆம் திகதி வரையான நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தயாரிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.