நுவரெலியா டொப்பாஸ் பகுதியில் நேற்று (07) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் அன்டன்தாஸ் வயது (32) நாதன் ரீட்டா வயது (32) எனவும் இருவரும் கணவன் மனைவி எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்களின் படி, கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கணவன் மனைவியை துப்பாக்கியால் சுட்டுள்ளதுடன் கணவனும் தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய கணவரின் தாயாருக்குச் சொந்தமான இவர்கள் தங்கியிருந்த வீட்டிலேயே நேற்று (07) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவ இடத்தை பார்வையிட்ட நுவரெலியா மாவட்ட நீதவான் வருகை தந்து மரண விசாரணைகள் இடம்பெற்ற பின் சடலங்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.