இத்தாலிய பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த இலங்கையர் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
37 வயதுடைய இலங்கையர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
காலையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த 25 வயதுடைய பெண்ணை சந்தேக நபர் பூங்காவிற்கு இழுத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது, குறித்த பெண்ணின் அலறல் சத்தம் கோட்டு அங்கு சிலர் வந்ததை தொடர்ந்து சந்தேகநபர் தப்பிச் சென்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.