பொத்துவில் சுற்றுலாப் பிரதேசத்திலுள்ள மசாஜ் நிலையம் ஒன்றுக்கு மசாஜ் செய்வதற்காகச் சென்ற 23 வயதுடைய இஸ்ரேலிய யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரை பொத்துவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட குறித்த யுவதி பொத்துவில் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், விசாரணைகள் நடத்தப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மசாஜ் நிலையத்தில் சிகிச்சையாளராக கடமையாற்றி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.