சீனாவின் சினோபெக் நிறுவனம் அண்மையில் இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்ததுடன், அதன் பிரகாரம் சினோபெக் வர்த்தக நாமத்தின் கீழ் முதலாவது எரிபொருள் நிலையம் தற்போது மத்தேகொடை பிரதேசத்தில் இயங்கி வருகின்றது.
இந்த எரிபொருள் நிலையம் நேற்று (30) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதேவேளை, சிபெட்கோ மற்றும் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களின் விலைகளை விட 3 ரூபா குறைவாக சினோபெக் எரிபொருள் விற்பனை நிலையங்கள் ஊடாக எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.