தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு ஆசிரிய பயிலுனர்களை இணைத்துக் கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 10ஆம் திகதி முதல் ஆசிரிய பயிலுனர்கள் தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கு உள்வாங்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த விடயம் தொடர்பில் தேசிய கல்வியியல் கல்லூரி பீடாதிபதிகளுக்கும் அறிவிக்க உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.