போலி ஆவணங்களுடன் இத்தாலி செல்ல முற்பட்ட தம்பதியினர் விமான நிலையத்தில் வைத்து கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

போலி ஆவணங்களுடன் இத்தாலி செல்ல முற்பட்ட தம்பதியினர் விமான நிலையத்தில் வைத்து கைது!


போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த இளம் தம்பதி இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து நேற்று (01) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.


யாழ். சங்கானைப் பிரதேசத்தில் வசிக்கும் இந்தத் தம்பதிகளில் இளைஞனுக்கு 27 வயது. யுவதிக்க 28 வயது என அதிகாரிகள் தெரிவித்தனர்.


அன்று மாலை 05.00 மணியளவில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபிக்கு புறப்பட்ட எதிஹாட் எயார்லைன்ஸின் ரிவை-279 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.


இவர்கள் மீதான சந்தேகத்தின் அடிப்படையில் குடிவரவு. குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு வரவழைக்கப்பட்டு, அவர்கள் கொண்டு வந்த பயணப்பொதிகளை சோதனையிட்ட போது ​​பொய்யான தகவல்களுடன் தயாரிக்கப்பட்ட இரண்டு கடவுச்சீட்டுகளும் இந்த இளைஞனிடம் இருந்த போலி விசாவும் கண்டுபிடிக்கப்பட்டது.


யுவதியின் வீசா தொடர்பில் வினவிய போது அந்தப் பெண் மௌனம் காத்தமையால், குடிவரவு குடியகழ்வு பெண் அதிகாரி வரவழைக்கப்பட்டு யுவதியின் உடலை பரிசோதித்த போது அவரது உள்ளாடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போலி இத்தாலிய வீசா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு போலி கடவுச்சீட்டுகளின் உண்மையான உரிமையாளர்களான  கோட்டைபகுதியில் வசிக்கும் தம்பதியினர் ஏற்கனவே தங்களுடைய உண்மையான கடவுச்சீட்டு மற்றும் விசாக்களை பயன்படுத்தி இந்த விமானத்தில் இருக்கையில் அமர்ந்திருந்தனர்.


குடிவரவு குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட தம்பதியினர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


வட பிராந்தியத்தில் 20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்கள் போலியான தகவல்கள் அடங்கிய பொய்யான ஆவணங்களைப் பயன்படுத்தி ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்லும் போக்கு அதிகரித்து வருவதாக கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.