ஒன்பது அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் மீண்டும் குறைத்துள்ளது.
அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த விலை குறைப்பு நேற்று (16) முதல் அமுலில் உள்ளது.
நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 400 கிராம் உள்நாட்டு பால்மா 29 ரூபாயால் குறைக்கப்பட்டு 970 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
ஒரு கிலோ கிராம் தாய்லாந்து நெத்தலி 15 ரூபாய் குறைக்கப்பட்டு 1160 ரூபாய்க்கும் சிவப்பு சீனி ஒரு கிலோ கிராம் 10 ரூபாயால் குறைக்கப்பட்டு 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
ஒரு கிலோ கிராம் சோயா மீட் 25 ரூபாயாலும் ஒரு கிலோ கிராம் உருளைக்கிழங்கு 5 ரூபாயாலும் குறைக்கப்பட்டு முறையே 625 மற்றும் 325 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.
ஒரு கிலோ கிராம் பாசுமதி அரிசி 15 ரூபாயால் குறைக்கப்பட்டு 675 ரூபாய்க்கும் 1 கிலோ கிராம் வெள்ளைப்பூடு 5 ரூபாயால் குறைக்கப்பட்டு 630 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.
சிவப்பு பச்சை அரிசி ஒரு கிலோ கிராம் 2 ரூபாயால் குறைக்கப்பட்டு 147 ரூபாய்க்கும் ஒரு கிலோ கிராம் கடலை 5 ரூபாயால் குறைக்கப்பட்டு 555 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.