சிறுவனின் மரணத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து சுகாதார அமைச்சும் வைத்தியசாலையும் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையிலேயே கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் இயக்குநர் வைத்தியர் ஜி விஜயசூரிய இதனை தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளதால் பல தரப்பினர் முறைப்பாடு செய்துள்ளதால் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட வைத்தியர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் நாட்டிலிருந்து வெளியேறுவது குறித்து குறிப்பிட்ட வைத்தியர் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு அறிவித்தாரா என வைத்தியசாலையின் இயக்குநரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்துள்ள அவர் குறிப்பிட்ட உயிரிழப்பு இடம்பெறுவதற்கு முன்னரே வைத்தியர் விசாவிற்கு விண்ணப்பித்திருந்ததால் விசாரணைகள் முடிவடையும் வரை எந்த முடிவிற்கும் வரமுடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட மருத்துவரை சுகாதார அமைச்சின் கீழ் பணிக்கு அமர்த்தவில்லை அவர் கொழும்பு பல்கலைகழக மருத்துவ பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளரே அவர் எனவும் விஜயசூரிய தெரிவித்துள்ளார்.