எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த மிஹிந்தலை புனித நகரத்தின் 4.1 மில்லியன் ரூபா மின்சார கட்டணத்தை செலுத்தியுள்ளது.
மிஹிந்தலை புனித நகரத்திற்கான நிலுவை கட்டணங்கள் தொடர்பில் முன்னறிவித்ததன் பின்னர் இலங்கை மின்சார சபை புதன்கிழமை (02) மின் இணைப்பை துண்டித்துள்ளது.
மிஹிந்தலை புனித நகரத்திற்கான மின்சாரத்தை துண்டிக்கும் நடவடிக்கையை கண்டித்து, நிலுவையில் உள்ள பாக்கிகள் தீர்க்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய பௌத்த ஆலோசனைக் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாக அறிக்கையொன்றை விடுத்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் பிரேமதாச தெரிவித்தார்.
இதற்காக கட்சி உறுப்பினர்கள் மற்றும் பிற நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்ட நன்கொடைகளில் இருந்து இந்த நிலுவைத் தொகை செலுத்தப்பட்டது என அவர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)