மேலும் 300 பொருட்களுக்கான இறக்குமதி தடை அடுத்தமாத நடுப்பகுதியில், நீக்கப்படும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கேகாலை பொல்பிட்டிய பகுதியில் இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரு வருடத்துக்கு முன்னதாக சுமார் ஆயிரத்து 100 பொருட்களுக்கான இறக்குமதி தடை விதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
எனினும், புதிய பொருளாதார போக்குகளுடன் முன்னதாக இரண்டு சந்தர்ப்பங்களில் தலா 300 பொருட்களுக்கான இறக்குமதி தடையை நீக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.