மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு விநியோகிக்கப்படும் மின்சார விநியோகம் தடைப்படுதல் மற்றும் அத்தியாவசிய உள்ளக விஸ்தரிப்பு பணிகள் காரணமாக எதிர்வரும் 19ஆம் திகதி சனிக்கிழமை மு.ப. 8.00 மணி முதல் மறுநாள் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.00 மணி வரையிலான 18 மணிநேர நீர் விநியோகத் தடை பின்வரும் பகுதிகளில் அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, கோட்டை, கடுவலை நகரசபை பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ பிரதேச சபை பகுதிகள், கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபை பகுதிகள், இரத்மலானை மற்றும் கட்டுப்பெத்த ஆகிய பிரதேசங்கள் நீர் விநியோகத் தடையினால் பாதிக்கப்படும்.
நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்.