க.பொ.த சாதாரண பரீட்சையை எதிர்காலத்தில் 10 ஆம் தரத்தில் நடத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பு ரோயல் கல்லூரியில் நடந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் க.பொ.த சாதாரண பரீட்சைக்கு மாணவர்கள் 10ஆம் தரத்தில் தோற்றிய போதும் பிற்காலத்தில் அது 11ஆம் தரம் வரை நீட்டிக்கப்பட்டதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்த மாற்றத்தை திடீரென செய்ய முடியாததுடன், 1, 6 மற்றும் 10 ஆகிய தரங்களில் ஆரம்பிக்கும் வகையில் ஆரம்பம், கனிஷ்ட இளநிலை மற்றும் சிரேஷ்ட இளநிலை என்ற அடிப்படையில் மூன்று வகைப்படுத்தலின் கீழ் இது மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.