QR முறைமையிலான எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த மாதம் மேலும் அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (20) நடைபெற்ற கூட்டத்தில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் அடுத்த ஆறு மாதங்களுக்கான எரிபொருள் திட்டங்கள் மற்றும் விநியோகம் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டதாக அமைச்சர் தனது டுவிட்டரில் தெரிவித்தார்.
இதன்படி, எரிபொருள் இறக்குமதித் திட்டங்கள், சுத்திகரிப்புச் செயற்பாடுகள், சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகள், QR ஒதுக்கீடு உட்பட பல விடங்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
இதனையடுத்தே, உரிய மதிப்பீடுகளின் முடிவில், தற்போதுள்ள எரிபொருள் QR ஒதுக்கீடு முறைமையின் கீழ் ஆகஸ்ட் மாதத்தில் அதிகரிக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.