தாம் முதலமைச்சரானால் இலங்கை கடற்படையை எதிர்க்க மீனவர்களின் கையில் வெடிகுண்டை கொடுத்து அனுப்புவேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சீமான், ஆளும் திமுக அரசை கடுமையாக சாடினார். திமுகவை வீழ்த்த முடியாது என கூறுவதாக பேசிய அவர், நிரந்தர முதல்வர் என எழுதி வைத்தவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று அனைவருக்கும் தெரியும் என்றார்.
மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசு பாராமுகமாக இருப்பதாக குற்றஞ்சாட்டினார். இலங்கை கடற்படையால் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டால் யாரும் கண்டு கொள்வதில்லை என்றும், இதுவரை 800க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தாம் ஆட்சிக்கு வந்தால், நெய்தல் படையை உருவாக்கி, மீனவர்கள் கடலுக்கு செல்லும் போது, ஆயுதங்களை கொடுத்து அனுப்புவேன் என்றும் சீமான் தெரிவித்தார்.