ட்விட்டர் சமூக வலைத்தளத்தை கறுப்பு நிறமாக மாற்றுவதற்கு எதிர்ப்பார்ப்பதாக அதன் தலைவர் ஈலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தினை பொறுப்பேற்ற ஈலோன் மஸ்க் அதில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தின் தலைவராக அவர் பொறுப்பேற்றதன் பின்னர் நிறைவேற்று அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பதவிநீக்கப்பட்டனர்.
இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் நிறத்தை கறுப்பு நிறமாக மாற்றுவது தொடர்பில் தமது ட்விட்டர் பக்கத்தில் ஈலோன் மஸ்க் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.
இதன்படி, 3 இலட்சத்திற்கும் அதிகமானோர் குறித்த பதிவில் வாக்களித்துள்ளதுடன் அவர்களில் பெரும்பாலானோர் ட்விட்டரின் நிறத்தை மாற்றுவதற்கு ஆதரவு அளித்துள்ளனர்.