கிழக்கு கடற்பரப்பில் எவ்வித தீப்பரவல் சம்பவமும் இடம்பெற்றிருக்கவில்லை என கடற்படை விளக்கமளித்துள்ளது.
திருக்கோவில் - கோமாரி கடற்பரப்பில் நேற்றிரவு தீப்பரவல் ஏற்பட்டதாக கடற்படைக்கு மீனவர்களால் முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது.
எனினும், அதனை கடற்படையினர் உறுதிப்படுத்தியிருக்கவில்லை என்பதுடன், இன்றைய தினமும் தேடுதல் பணி இடம்பெற்றிருந்தது.
இந்தநிலையில், தீப்பற்றியமைக்கான எந்தவொரு சான்றும் அங்கு கிடைக்கப்பெறவில்லை.
அந்த பகுதியில் பயணித்த சரக்கு கப்பல் ஒன்று பழுதடைந்த நிலையில், நிறுத்தி வைக்கப்பட்ட போது, அதன் ஒளி என கடற்படை குறிப்பிட்டுள்ளது.