அதிவேகமாக வந்த வாகனத்தை சாரதி கட்டுப்படுத்த முடியாமல் அவர் பய
ணித்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்தில் மோதியதில் 18 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
கடவத்தை குறுக்கு வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் அன்டர்சன் வீதியில் நுழைந்து ஹில் வீதி நோக்கி பயணித்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மற்றும் பின்னிருக்கையில் பயணித்தவர் ஆகியோர் களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் பின்னிருக்கையில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தெஹிவளை கவுடான வீதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை, நேற்று மாலை மெதகம - காக்கப்பள்ளி வீதியில் தம்பகல்ல வெவக்கு முன்பாக மோட்டார் சைக்கிள் ஒன்று மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 16 வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளை அதிவேகமாக செலுத்தியதன் காரணமாக வாகனத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்கள் முஹுனுவடவன மற்றும் ருவன்வெல்ல பிரதேசங்களில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)