ஹொரணை – அங்குருவாதோட்டை பகுதியில் தாயொருவரும் அவரது 11 மாத குழந்தையும் மரணித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹொரணை – வரகாகொட பகுதியில் வைத்து அவர் இன்று காலை கைது செய்யப்பட்டதாக பதில் காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
சந்தேகநபரை கைதுசெய்ய முற்பட்ட போது அவர் காவல்துறையினரை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தன்னை தானே காயப்படுத்தி கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அவர் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர், உயிரிழந்த பெண்ணின் கணவரின் மைத்துனர் என பதில் காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.