இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடல்வழி எண்ணெய் குழாய் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
இந்த நாட்டில் எரிபொருள் விநியோகத்தை விரைவுபடுத்துவதும், மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும்.