சப்புகஸ்கந்த – மாபிம பகுதியில் 13,200 லீற்றர் ஒக்டென் 92 ரக பெற்றோலுடன் மண்ணெண்ணெய்யினை கலந்த இரண்டு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதி மக்களினால் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலை தொடர்ந்து எரிபொருள் தாங்கி சாரதிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலன்னாவை எண்ணெய் தாங்கி வளாகத்தில் இருந்து பேருவளை பகுதிக்கு பெற்றோலை ஏற்றிச் சென்ற தாங்கி ஒன்று, மாபிம பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு மற்றுமொரு தாங்கியில் இருந்து, மண்ணெண்ணெய் கலக்கப்பட்டதாக சப்புகஸ்கந்த காவல்துறையினர் தெரிவித்தனர்.