இலங்கையில் இன்று (19) தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச தங்கத்தின் விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் 25 அமெரிக்க டொலர்கள் அதிகரித்து 1,977 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக உள்ளூர் தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை 154,500 ரூபாயாக இருந்த 22 கரட் தங்கத்தின் விலை இன்று 157,250 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், 24 கரட் தங்கத்தின் விலை வெள்ளியன்று 167,000 ரூபாயில் இருந்து 170,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.