இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு நாள் பயணமாக சற்று முன்னர் இந்தியாவிற்கு பயணமானார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வெளியுறவு தொடர்புகளின் 75 ஆண்டு பூர்த்தியையொட்டி இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும், பரஸ்பர நலன்களை ஆராயவும் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.