கடந்த 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் தனியார் பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பைத் தொடர்வதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
உரிய கடன் தொகையை பெறும் மாணவர்கள் வேலைவாய்ப்பு சார்ந்த (தொழிற்கல்வி) உயர் கல்வியை கற்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அவ்வாறான 5,000 மாணவர்களிடம் இருந்து நாளை (04) முதல் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.