அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
பதுளையில் நேற்று (09) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ரத்னபிரிய, இந்த வருடம் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என தெரிவித்தார்.
“இந்த ஆண்டு தேர்தல் இல்லை. 2024 தேர்தல் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலே அடுத்த வருடம் நடைபெறவுள்ள முதலாவது தேர்தலாக இருக்கும் என நாம் அறிந்து கொண்டோம். 2024ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக மக்கள் ஆணையுடன் தெரிவு செய்ய வேண்டும் என நான் முன்மொழிகிறேன்” என்று அவர் கூறினார்.
ரத்நாயக்க மேலும் தெரிவிக்கையில், “கடந்த கால அரசியல் தலைவர்களால் நாட்டை ஆள முடியவில்லை என்பதை உணர்ந்ததன் காரணமாகவே நாங்கள் வெளியே வந்து மாற்றத்தை நாடினோம். பொதுவாக, ஒரு நாடு வீழ்ச்சியடையும் போது அது எதிர்க்கட்சித் தலைவரால் கைப்பற்றப்படும். ஆனால், அது இங்கு நடைபெறவில்லை” என்றார்.